மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள கொஸ்ரரிகாவில் தனியார் பயணிகள் விமானம் ஒன்று நொருங்கி விழுந்து ஏற்பட்ட விபத்தில் 10 வெளிநாட்டவர்கள் உள்ளிட 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் 10 வெளி நாட்டவர்களும், பணியாளர்களுமாக 12 பேர் பயணம் செய்துள்ள நிலையில் விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில் விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொருங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விமானத்தில் பயணித்த 12 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் இறந்தவர்களில் பத்து பேர் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் அதில் ஐந்து பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.