Home உலகம்நடுவர் சரியாக பார்க்காத காரணத்தினால் பெனால்டி வழங்கப்பட்டது – ஆர்சனல் முகாமையாளர்

நடுவர் சரியாக பார்க்காத காரணத்தினால் பெனால்டி வழங்கப்பட்டது – ஆர்சனல் முகாமையாளர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நடுவர் சரியாக பார்க்காத காரணத்தினால் பெனால்டி வழங்கப்பட்டது என ஆர்சனல் கழகத்தின் முகாமையாளர் அர்சென் வெங்கர் ( Arsene Wenger ) தெரிவித்துள்ளார். ஆர்சனல் கழகத்திற்கும் வெஸ்ட் போர்ம்விச் அல்பியன் கழகத்திற்கும் இடையில் நடைபெற்ற பிரிமியர் லீக் போட்டியின் போது, ஏற்பட்ட சர்ச்சை குறித்து இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஹவுத்தோன்ஸில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்த நிலையில் அல்பியன் கழகத்திற்கு பெனால்டி உதை வழங்கப்பட்டது. இந்த பெனால்டி உதை போட்டியின் தன்மையையே மாற்றியமைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கை குறித்து ஆர்சனல் முகாமையாளர் கடும் அதிர்ப்தியை வெளியிட்டுள்ளார்.

நடுவர் மைக் டீனுக்கு உரிய முறையில் பார்க்கக் கிடைக்காத காரணத்தினால் இவ்வாறு பெனால்டி உதை வழங்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More