Home இந்தியாஇந்தியாவும் பாகிஸ்தானும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொண்டுள்ளன.

இந்தியாவும் பாகிஸ்தானும் அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொண்டுள்ளன.

by admin

இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை பரிமாறிக் கொண்டுள்ளன. 1988-ம் ஆண்டு, கையெழுத்தாகிய அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு தடை விதிக்கும் ஒப்பந்தம் 1991-ம் ஆண்டு அமுலுக்கு வந்திருந்தது.

இதன்படி இரு நாடுகளும் தத்தமது நாட்டில் உள்ள அணுமின் நிலையம் உள்ளிட்ட அணுசக்தி அமைப்புகளின் விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதலாம் பரிமாறிக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில் நேற்று 27-வது முறையாக இந்தியாவும் பாகிஸ்தானும் தத்தமது நாட்டில் அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியலை பகிர்ந்துகொண்டுள்ளன. இந்தப் பரிமாற்றம், டெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இரு நாட்டு தூதரகங்கள் வாயிலாக நேற்று ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More