Home இலங்கைஜனாதிபதியை பலவீனப்படுத்துவது ஆபத்தானது :

ஜனாதிபதியை பலவீனப்படுத்துவது ஆபத்தானது :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்துவது ஆபத்தானது என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சில தரப்பினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்துவதற்கு முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு ஜனாதிபதியை பல்வேறு சதித் திட்டங்களை பயன்படுத்தி பலவீனப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எனினும், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவ்வாறு செய்யாவிட்டால் ஏனைய தரப்பினர் அதில் நலன்களை அனுபவிக்கக்கூடும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More