ஜெர்மனியில் அதிகரித்துவரும் வன்முறைகள் மற்றும் குற்ற செயல்களுக்கு புலம்பெயர்ந்து நாட்டுக்குள் வந்தவர்கள் காரணமாக இருக்கலாம் என அந்நாட்டு அரசினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வட மேற்கு ஜெர்மனியில் உள்ள லோயர் சாக்ஸோனி ( Lower Saxony ) என்ற மாநிலத்தில் இடம்பெற்ற குற்ற செயல்கள் குறித்த தரவுகளை ஆய்வு செய்ததில் இந்த முடிவு எட்டப’பட்டதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் மட்டும் 90 சதவிகித குற்ற செயல்களின் அதிகரிப்புக்கு அண்மைய சில ஆண்டுகளில் புலம்பெயர்ந்து ஜெர்மனிக்குள் வந்த 14 இற்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளம் ஆண்கள்தான்; காரணம் எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் அந்நாட்டுப் பிரஜைகளினால் இரு தடவைகள் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது