ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் தமிழ் நாட்டில் போக்குவரத்து முடங்கியுள்ளது.
சென்னையில் நேற்று 13-வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தை அ.தி.மு.க. உள்பட 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்ட போதும் தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்துவிட்டன. இதனைத் தொடர்ந்து தி.மு.க. உள்பட 13 தொழிற்சங்க நிர்வாகிகள் வெளியேறி அதிகாரபூர்வ பணிப்புறக்கணிப்பு அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டனர்.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தமிழகம் முழுவதும் இன்று தீவிரமடைந்துள்ளதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இந்தப் போihட்டத்தினால் போராட்டத்தால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது.