Home இந்தியாநடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு

நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக வழக்கு

by admin

ஆர்.கே.நகர் தொகுதி மக்களை இழிவாக பேசியதாக தெரிவித்து நடிகர் கமல்ஹாசனுக்கு எதிராக இளங்கோவன் என்பவர் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அண்மையில் நடைபெற்ற ஆர்.கே.நகர் தேர்தலில் சுயேட்சையாக நின்ற டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக ஆளும் கட்சியான அதிமுகவும், எதிர்கட்சியான திமுகவும் இடம்பிடித்தன

இந்தநிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசன்; ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிப்பதற்கு பணம் வாங்கியது திருடனிடம் பிச்சை எடுத்ததற்கு சமம் என தெரிவித்திருந்தார். இருபதாயிரம் ரூபாய் அமவுண்டுக்கான டோக்கனாக இருபது ரூபாய் நோட்டையே கொடுத்து ஜெயிச்சார் பார்யா? என்ற பார் புகழும் பாராட்டும் குறிப்பிடத்தக்கது எனவும் நடிகர் கமல்ஹாசன் குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், டி.டி.வி. தினகரன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில் கமல்ஹாசன் ஆர்.கே. நகர் தொகுதி மக்களை விமர்சனம் செய்தது குறித்து கோவை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. கமல்ஹாசனின் இந்தக்கருத்து மனவேதனை அளிக்கிறது எனவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனு எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ராஜ்குமார் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More