இணையதளங்களில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை டெல்லி காவல்துறையினர்; கண்காணிப்பதற்கான அனுமதியை முதல்முறையாக இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்தியாவில் பல்வேறு வகை தாக்குதல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகள் இணையதளங்கள் மூலமாக திட்டங்கள் வகுப்பது வழமையாக உள்ளது. மேலும் இணையத்தளங்கள் மூலம் தீவிரவாதப் பிரச்சாரங்களையும் இளம் தலைமுறையிடையே பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதனைத் தடுக்கும் வகையில் இணையதளங்களில் தீவிரவாதி களைக் கண்காணிக்கும் பணியினை டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவு இறங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி, லோதி காலனியில் காவல்துறை சிறப்பு பிரிவுக்கு தனி அலுவலகம் அமைக்கப்பட்டு தொலைதொடர்பு தொழில்நுட்பக் கருவிகள் மூலம், தீவிரவாதிகள் பயன்படுத்தும் அனைத்து வகையான சமூக இணையதளங்களும் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 6 கோடி ரூபா பெறுமதியான கருவிகள் மற்றும் மென்பொருளை வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.