228
தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் கொகைன் போன்ற சட்டவிரோத போதை பொருட்களைப் பயன்படுத்துவதாக இந்திய மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அண்மையில் தெலுங்கு சினிமாவில் போதைபொருட்களை பயன்படுத்தியதாக சில நடிகர், நடிகைகள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதேவேளை தற்போது போதைப் பழக்கம் தமிழ் திரையுலகத்திலும் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொக்கைன், கஞ்சா, ஹெராயின், சூடோ எபிடரின், எல்.எஸ்.டி போன்ற போதைப்பொருள்கள் தமிழ்நாட்டில் தாராளமாக பயன்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 2017ம் ஆண்டில் தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல் 13 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் இந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தப் போதைப்பொருள்கள் பெரும்பாலும் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படுவதாகவும் கடந்த நவம்பர் மாதம் கொலம்பியாவில் 12 டன் போதைபொருள் கைப்பற்றப்பட்டதாகவும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூறுகிறது.
இந்நிலையில் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க, போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும், தவறு செய்வோருக்கு கடுமையான தண்டனை அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார் தமிழகத்தின் பிரபல நடிகை ரஞ்சனி.
தமிழ்த் திரையுலகை சேர்ந்த பிரபலங்களுக்கு போதைப் பொருட்களை விநியோகிக்கும் குழுவை கண்காணித்து வருவதாக, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
Spread the love