ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸாக் (ஜவாத்) கட்சியில் வகிக்கும் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
குழந்தை மரைக்கார் அப்துல் ரஸாக் என்பவர், கட்சிக் கட்டுக்கோப்புகளை கடுமையாக மீறி நடப்பதனால் அவர் வகிக்கும் கட்சியின் பிரதிப் பொருளாளர் பதவியிலிருந்தும் அத்துடன் உச்சபீட உறுப்பினர் பதவியிலிருந்தும் ஜனவரி 03ஆம் திகதியிலிருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவரை இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் செயலாளர், தெரிவித்துள்ளார்.