Home பிரதான செய்திகள்ஜோகோவிச் முதலாம் இடத்தை இழந்துள்ளார்.

ஜோகோவிச் முதலாம் இடத்தை இழந்துள்ளார்.

by admin

பாரீஸ் மாஸ்டேர்ஸ் டென்னிசின் கால்இறுதி ஆட்டத்தில்  முதல்தர வீரரான செர்பியாவைச் சேர்ந்த  ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்ததன் மூலம் தனது  முதலாம்  இடத்தை இழந்துள்ளார்.  பிரான்சில் இடம்பெற்று வருகின்ற பாரீஸ் மாஸ்டேர்ஸ் டென்னிஸின்  கால்இறுதி ஆட்டத்தில்  ஜோகோவிச் குரோஷியாவை சேர்ந்த சிலிச் 6-4, 7-6 (7-2) என்ற நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ஜோகோவிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் சிலிச் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இதற்கு முன்பு 14 முறையும் அவர் தோல்வி அடைந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து  உலகின்  முதல்தர வீரராக ஜோகோவிச் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More