குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த விசாரணை அறிக்கை தெடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. சில அரசியல் கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த கட்சித் தலைவர்கள் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, கூட்டு எதிர்க்கட்சி, மஹஜன எக்சத் பெரமுன உள்ளிட்ட கட்சிகள் கட்சித்தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளன.
அதேவேளை முன்கூட்டியே பாராளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.