இலங்கை, இந்திய அமைச்சர்களுக்டையேயான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இந்திய தலைநகர் டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இடம்பெற்றது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமவீரா, மீன் பிடித்துறை அமைச்சர் மகிந்த அமர வீர, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் ஆகியோரும் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய வேளாண் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராதா மோகன்சிங், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையில் மீன்பிடிப்பது தொடர்பான எல்லை வரையறை மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை பிரநிதிகள் எல்லைத் தாண்டும் மீனவர்கள் மீது இனி தாக்குதல் நடத்தப்படாது எனவும் அதேபோல், மீனவர்கள் எல்லைத்தாண்டும்போது உயிர்ச்சேதம் ஏற்படாது என உறுதி அளித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்கள் பிரச்சினை குறித்து பேசுவதற்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கூட்டுக்குழு கூட்டத்தில் படகுகளை விடுவிப்பது தொடர்பாக விவாதிக்கப்படும் எனவும் இந்த குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை மீனவர் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் இந்த கூட்டத்தில் மீனவர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை இந்திய அமைச்சர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது
Nov 5, 2016 @ 08:37
சர்வதேச கடல் பகுதி அருகே மீன் பிடித்தல், மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை, இந்திய கடற்படையினரின் நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக இந்தியத் தலைநகர் டெல்லியில் இன்றைய தினம் இலங்கை இந்திய அமைச்சர்கள் பங்கேற%E