குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 10ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய இவ்வாறு விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு பற்றி விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி., கூட்டு எதிர்க்கட்சி உள்ளிட்ட சிலதரப்புக்கள் கோரியிருந்தன.
எதிர்வரும் 23ம் திகதியே பாராளுமன்றம் கூடவிருந்தது. எனினும் அதற்கு முன்னதாக பாராளுமன்ற அமர்வுகளை நடத்துமாறு சபாநாயகரிடம் எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 10ம் திகதி விசேட பாராளுமன்ற அமர்வு நடைபெறவுள்ளது.
இந்த வாரத்தில் விசேட பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படக்கூடிய சாத்தியம்
Jan 8, 2018 @ 02:57
இந்த வாரத்தில் விசேட பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது.
இது தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென சில அரசியல் கட்சிகள் சபாநாயகரிடம் கோரியிருந்தன.
பாராளுமன்றம் கூட்டப்பட உள்ள தினத்திற்கு முன்னதாக பாராளுமன்றை கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சபாநாயகரிடம் கோரியிருந்தார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை பற்றிய விவாதம் நடத்துவதற்காக பாராளுமன்றை கூட்டுவது தொடர்பில் இன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.