குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரோஹினிய சமூகத்தை பாதுகாப்பதற்கு யுத்தம் செய்வதனை தவிர வேறும் மாற்று வழிகள் கிடையாது என ரோஹினிய கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மியன்மார் அரச ஆதரவு பயங்கரவாதத்திலிருந்து ரோஹினிய சமூகத்தை பாதுகாப்பதற்கு வேறும் எந்தவொரு மாற்று வழியும் கிடையாது எனவும் அதனால் யுத்தம் செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தி அரக்கன் ரோஹிங்கியா சல்வேஷன் ஆமி ( The Arakan Rohingya Salvation Army ) என்ற படையினரே இவ்வாறு மியன்மார் அரச படையினருக்கு எதிராக யுத்தம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வன்முறைகள் காரணமாக சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் ரோஹினியாக்கள் பங்ளாதேஸிற்கு குடிபெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மியன்மாரில் ரோஹினிய இனச் சுத்திகரிப்பு இடம்பெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.