போதை மருந்து வர்த்தகத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு கைதாகி சிறையில் இருந்த பிலிப்பைன்ஸ் நாட்டு மேயர் ஒருவர், அவரது சிறை அறையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சிறையில் சட்டபூர்வமற்ற ஆயுதங்களை தேடியபோது, அதிகாரிகளை நோக்கி அல்புயேரா நகர மேயர் ரோலான்டோ எஸ்பிநோசா துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதாகவும் அவரும், அவருடன் இருந்தவரும் சுட்டு கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனனர்.
போதை மருந்து வர்த்தக ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அதில் ஈடுபட்டுள்ளோhர் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடெர்டேவினால் கடந்த ஓகஸ்ட் மாதம் வெளியிட்ட 150க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பெயர்களில் எஸ்பிநோசாவின் பெயரும் காணப்படடதனைத் தொடர்ந்து தான் கொல்லப்படக்கூடும் என்ற அச்சம் காரணமாக அவர் காவல்துறையிடம் சரணடைந்திருந்தார்.
இதேவேளை மற்றுமொரு நகர மேயரும் பிலிப்பைன்ஸின் தென் பகுதியில் காவல்துறையினரோடு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.