போக்குவரத்த்து தொழிற்சங்கங்கள் 5 நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் தொழிலாளர்களுக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்து முடங்கி உள்ளதுடன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பாமல் 5-வது நாளாக இன்றும் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை உய்ர்நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்துள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சினை நீடித்து வருகின்றது என சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் 5 ஆயிரம் கோடி ரூபா தொழிலாளர்களின் பணத்தினை வழங்க அரசு காலதாமதம் செய்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான அனைத்து நிலுவைத்தொகையினையும் உடனே வழங்க வேண்டும் என அரசுக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் போராட்டத்ததுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீக்கப்படாது எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.