Home இலங்கைஎந்தவொரு விசாரணையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

எந்தவொரு விசாரணையையும் எதிர்நோக்கத் தயார் – மஹிந்த ராஜபக்ஸ

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எந்தவொரு விசாரணையையும் எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது அநீதி தலைதூக்கியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். திஸ்ஸமஹாராமவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டது முதல் அழிவுகளே ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். போதைப் பொருட்கள் எவ்வளவு தொகை பிடிக்கப்படுகின்றது என கவனிக்கப்பட வேண்டும் இவ்வாறு பிடிக்கப்படும் போதைப் பொருட்களுக்கு என்ன நேர்கின்றது என்பது தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தலில் பிடிக்கப்படும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படுவதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்தப்படுவதனை தாம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More