குளோபல் தமிழ்ச்செய்தியாளர்…
கிளிநொச்சி பொதுச் சந்தையில் மீன் வியாபாரி ஒருவரின் மீன்களை திருடி விற்பனை செய்த கரைச்சி பிரதேச சபையின் துப்பரவு பணியாளர் ஒருவருக்கு பணித் தடை வழங்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம்(07) கிளிநொச்சி மீன் சந்தையில் வியாபாரி ஒருவர் முதல் நாள் மாலை வியாபார நடவடிக்கைகள் பூர்த்தி செய்த பின்னர் இறால் கனவாய் மற்றும் மீன்களை ஜஸ் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டுச் சென்றிருக்கின்றார்.
மறுநாள் (07) மீண்டும் காலையில் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமான போது சுமார் 20 கிலோ கிராம் அளவில் இறால் மற்றும் கனவாய் குறைவாக காணப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து விசாரணை செய்த போது கரைச்சி பிரதேச சபையின் பணியாளர் ஒருவர் உணவகம் ஒன்றுக்கு இறால் மற்றும் கனவாய்களை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து குறித்த வியாபாரி கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து கரைச்சி பிரதேச செயலாளர் க.கம்சநாதன் குறித்த துப்பரவு பணியாளருக்கு உடனடியாக பணித்தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்