”ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பாக நீதியை கோரி நிற்கின்ற அவரது உறவினர்களுக்கு, உரிய விசாரணை மூலம், நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும்” என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் ஒன்பதாவது நினைவு தினம் இன்று பொறலை மயானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உறவினர்கள் நண்பர்கள் ஊடகவியலாளர்கள், சில தூதரக அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில், கொலையாளிகள் பாதுகாக்கப்படுகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது என அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது. இதனை இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் துணை தூதுவர் றொபட் ஹில்டன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ளெியிட்டதுடன், இந்தப் படுகொலை படுகொலை குறித்த விசாரணைகளை துரிதப்படுத்த வேண்டும்” எனவும் கோரப்பட்டுள்ளது.