Home இலங்கைவாக்கு கேட்டவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு…

வாக்கு கேட்டவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு…

by admin


தேர்தல் பரப்புரைக்காக வீடுகளுக்கு சென்ற வேட்பாளரின் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு உள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது. சாவகச்சேரி பிரதேச சபையின் கைதடி தெற்கு வட்டாரத்தில் போட்டியிடும் செல்லையா ஜெயபாலன் என்பவர் கடந்த வாரம் கைதடி தெற்கில் தான் போட்டியிடும் வட்டாரத்தில் உள்ள வீடுகளுக்கு தேர்தல் பரப்புரைக்காக சென்று இருந்தார். அதன் போது வட்டார எல்லையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு , கால் நடையாக ஒவ்வொரு வீடுகளாக சென்று வாக்கு கோரி பரப்புரை செய்துள்ளார்.

பின்னர் மீண்டும் மோட்டார் சைக்கிள் நிறுத்திய இடத்திற்கு திரும்பி வந்த போது அவ்விடத்தில் மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை அடுத்து அப்பகுதிகளில் மோட்டார் சைக்கிளை தேடிய போதும் மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை அடுத்து மோட்டார் சைக்கிள் திருட்டு போய்விட்டது என சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More