குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிதி மோசடி குறித்து விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை துரித கதியில் வெளியிட்ட முதல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் இவ்வாறு விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களவுகளுக்கு இடமளிக்கக்கூடிய நபர் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.