குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2021ம் ஆண்டு வரையில் பதவியில் நீடித்திருந்தால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். 19ம் திருத்தச் சட்டம் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலை பாதிக்காது என்றால், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நான் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுதவற்கு தடையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டில் பதவி ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு ஆண்டுகள் ஆட்சி வகிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தால், தமக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.