177
யுத்தத்தில் பதிக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்ட வடபகுதி மக்களுக்கென இவ் வருடத்தின் முதல் காலாண்டுப் பகுதிக்குள் 125 நிலையான வீடுகள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனது. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படவுள்ள இந்த வீடுகளுக்கென மூவாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளனது.
யாழ்ப்பாணம், மன்னார் , வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் குறித்த பகுதிகளின் பிரதேச செயலாளர்களால் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு இந்த திட்டத்தில் அமைக்கப்படவுள்ள வீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love