சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைப்புக்களின் உறுப்பினர்கள், மற்றும் அமைச்சர்களின் பிள்ளைகள் கட்டாயம் அரசாங்க பாடசலைகளில் படிக்க வகை செய்யும் சட்டத்தை கொண்டுவர ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின், அரச பாடசாலைகள், ஏழைப் பிள்ளைகளுக்கான பாடசாலைகள் எனக் கூறப்பட்டு வருகிறது. அரச பாடசாலைகளிகளின் தரம், தனியார் பாடசாலைகளுக்கு நிகராக இல்லாத காரணத்தால் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் பிள்ளைகளை அரச பாடசாலைகளுக்கு அனுப்புவதில்லை.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு, போதுமான மாணவர்கள் எண்ணிக்கை இல்லாததால் 9000 அரசு ஆரம்ப மற்றும் நடுநிலை பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமாநில பாடசாலைக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைப்புக்களின் உறுப்பினர்கள்,, அமைச்சர்கள் ஆகியோர்களின் பிள்ளைகள் கட்டாயமாக அரசு பள்ளிகளில் தான் படிக்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை கொண்டு வர ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் இது குறித்து சட்ட முன்வரைவு தயாரிக்குமாறு சம்மந்தப்பட்ட அமைச்சர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என ஆந்திர சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா தெரிவித்துள்ளார்.
இந்த புரட்சிகரமான சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசாங்க பாடலைகளின் தரம் உயர்த்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும். இதற்காக ஆந்திரப்பிரதேசம் ஜென்மபூமி எனப்படும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கிழ் வெளிநாடுகளில் வாழும் ஆந்திர மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு ஆகும் 70 சதவிகித செலவை அரசு ஏற்றுக்கொள்ளும். வெளிநாடு வாழ் ஆந்திர மக்களிடமிருந்து மீதமுள்ள தொகை பெறப்படும் எனவும் அவர் கூறினார்.