குளோபல் தமிழ்ச்செய்தியாளர் கொழும்பு
உலக டென்னிஸ் தர வரிசையில் பிரித்தானிய வீரர் அண்டி மரே முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். 1973ம் ஆண்டின் பின்னர் கணனி முறையிலான தரப்படுத்தலில் முதல் தடவையாக பிரித்தானிய வீரர் ஒருவர் உலக தர வரிசையில் முதலிடம் பெற்றுக்கொண்டது இதுவே முதல் தடவையாகும்.
உலக டென்னிஸ் தர வரிசையில் முதலிடம் பெற்றுக்கொள்ள கிட்டியமை பெரு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுவரையில் முதனிலை வகித்து நாவொக் டுஜொவிக்கை பின்தள்ளி மரே முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார். பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மிலோ ரொஹானிக் விலகிக் கொண்டதனைத் தொடர்ந்து அந்தப் போட்டியின் வெற்றியாளராக மரே அறிவிக்கப்பட்டுள்ளார்.