Home இந்தியாஆண்டாளும் வைரமுத்துவும் தமிழகமும் – காவற்துறை முறை்பாடும்…

ஆண்டாளும் வைரமுத்துவும் தமிழகமும் – காவற்துறை முறை்பாடும்…

by admin

ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததாக கவிஞர் வைரமுத்து மீது ராஜபாளையம் காவற்துறையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்து கடவுள் ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த வைரமுத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த இந்து முன்னணி நகர செயலாளர் சூரி வடக்கு காவல் நிலையத்தில் வைரமுத்து மீது முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டில், கடந்த 7-ந்தேதி ராஜபாளையத்தில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, இந்து கடவுளான ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆண்டாளை அவமதிப்பு செய்தது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த முறைப்பாட்டின் பேரில் காவற்துறை அதிகாரி பவுல் ஏசுதாஸ் விசாரணை நடத்தி, கவிஞர் வைரமுத்து மீது அவமதிப்பு வழக்குபதிவு செய்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More