குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதியுடன் அப்பம் உண்டு அவருக்கு எதிராக செயற்பட்ட தற்போதைய ஜனாதிபதி மைத்திரி, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதேவிதமாக நெருக்கடி ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினரை ஜனாதிபதி திருடர்கள் என கூறுகின்ற போதிலும், தாங்கள் அவரை பிட்பொக்கட் ஜனாதிபதி என அழைப்பதாகத் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் முதுகில் குத்தியது போன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முதுகில் குத்த வேண்டாம் என கோருவதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியே மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.