குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலரி கிளின்ரனுக்கு சாதகமாக அந்நாட்டு உளவுப் பிரிவான எப்.பி.ஐ. கருத்து வெளியிட்டுள்ளது. ஹிலரி கிளின்ரன் அனுப்பிய சில மின்னஞ்சல்கள் தொடர்பில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் புதிதாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மின்னஞ்சல்களில் ஹிலரி, குற்றம் இழைத்திருப்பதற்கான எவ்வித சாட்சியங்களும் கிடையாது என எப்.பி.ஐ. உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தேர்தல்களுக்கு இரண்டு நாட்கள் காணப்படும் நிலையில் எப்.பி.ஐ. வெளியிட்டுள்ள இந்த கருத்து, ஹிலரிக்கு சாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜாங்கச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் அனுப்பி வைத்த மின்னஞ்சல்கள் தொடர்பிலேயே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.