குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவில் தனிநாட்டுக் கோரிக்கை விடுக்கும் தரப்பின் பலம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெய்னின் பிராந்தியமான கட்டலோனியாவில் அண்மையில் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் கட்டலோனியா தனி நாடாக இயங்க வேண்டுமென விரும்பிய தரப்பினர் அதிக செல்வாக்கினைப் பெற்றுக் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக அண்மையில் சபாநாயகர் தெரிவின் போது, கட்டலோனியா பிரிந்து செல்ல வேண்டுமென கோரிய முன்னாள் சபாநாயகரே மீளவும் சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். ரொஜர் டொரன்ட் இவ்வாறு சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டுக்கு வெளியே இருந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் கட்டலோனியாவை ஆட்சி செய்வதற்கு வழியமைக்கும் வகையில் இந்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.