Home இலங்கைபாராளுமன்ற மோதல்கள் காரணமாக கடும் வேதனை அடைந்தேன்

பாராளுமன்ற மோதல்கள் காரணமாக கடும் வேதனை அடைந்தேன்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பாராளுமன்றில் இடம்பெற்ற மோதல் சம்பவம் காரணமாக தாம் கடும் வேதனை அடைந்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். கடந்த 10ம் பாராளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான மோதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

இந்த மோதல் சம்பவம் தொடர்பிலான முழுமையான அறிக்கை தமக்குக் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கை பாராளுமன்றின் சிறப்புரிமை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் இலங்கையின் பாராளுமன்றம் சிறந்த ஓர் நிலையில் காணப்படுகின்றது எனினும் அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் பெரும் வேதனையளிக்கும் வகையில் அமைந்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More