வெளிமாநிலத்துக்கு கல்வி பயிலச்செல்லும் மாணவர்கள், தமிழக அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் 101-வது பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த அவர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அளித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலத்துக்கு உயர்கல்விக்காக செல்லும் மாணவர்கள், மாநில அரசில் பதிவு செய்ய வேண்டும் எனவும் பதிவு செய்யாததால்தான் இவ்வளவு குழப்பம் ஏற்படுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிமாநிலத்துக்கு கல்வி பயில செல்லும் மாணவர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தமிழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் தொடர்ச்சியாக இதுபோன்ற நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில் தமிழக அரசின் நடவடிக்கை என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போNது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் ஹஜ் பயணிகளுக்கான மானியம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பில் இந்த விடயம் மொடர்பில் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொள்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.