குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நான் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்னுடைய மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்குச் சென்றால் அங்கு நந்தகுமார், புஸ்பகுமார், முருகேசு என வைத்தியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால் வடக்கில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுகிறதுஎனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே சொந்த மண்ணில் மக்கள் பணியாற்ற முன்வரவேண்டும் என்றும் அழைப்புவிடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (17) கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்ததற்கு பெற்றோர்கள் ஆசியர்கள் மற்றும் மாணவர்களின் ஊக்கமும் காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும் எல்லா வளங்களும் இருந்தாலும் மாணவர்களின் அக்கறையும், உற்சாகமும் இல்லை என்றால் வெற்றிப்பெற முடியாது. இந்த வெற்றியும் சாதனையும் உங்களுகுரியது மட்டுமல்ல பெற்றோர்களதும் ஆசிரியர்களதும் வெற்றியே.
நீங்கள் இந்த நாட்டுக்;கும் மக்களுக்கும் சேவைசெய்ய வேண்டும். வடக்கில் படித்துவிட்டு கொழும்புக்கு சென்று சேவையாற்றுகின்றார்கள். வடக்கில் பதினைந்து வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் இல்லை அவர்கள் எங்கே என்றால் எங்களுடை பகுதியில் அதாவது தெற்கில் சேவை செய்கின்றார்கள். இதனைவிடவும் வெளிநாட்டுக்குச் சென்று விடுகின்றார்கள். எனவே பிறந்த மண்ணுக்கு சேவைசெய்ய முன்வரவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதனைவிட எல்லா வசதிகளும் உள்ள பாடசாலைகளும் சரி மாணவர்களும் சரி அவர்கள் சாதிப்பதில்லை. உதாரணமாக சாதிக்க வேண்டும் என்ற பசி இருக்கிறது கொழும்பில் உள்ள றோயல் கல்லூரி போன்ற பல முன்னணி பாடசாலைகளில் சாதனை பெறுபேறுகள் இல்லை. இதனை விட உங்கள் எல்லோருக்கும் தெரியும் அநுர பண்டார நாயக்க என்ற அரசியல்வாதியை அவரின் தாய் நாட்டின் பிரதமராக இருந்தார், அப்பா பிரதமரா இருந்தார் ,அக்கா ஜனாதிபதியாக இருந்தார, ; ஆனால் பாராளுமன்ற உறுப்பினராக வந்தார் அதற்கு மேல் வர முடியாது போய்விட்டது.
ஆனால் நான் ஒரு நூறு கிலோ மீற்றருக்கு அப்பால் இருந்து வந்து எம்பியாக அமைச்சரவை அமைச்சராக வந்தேன். அநுரவுக்கு முடியாது போய்விட்டது ஏன் எல்லா வசதியும் இருந்து முன்னுக்கு வரவேண்;டும் என்ற முயற்சி இல்லை. மேலும் கிராமத்தில் ஏழை குடும்பத்தில் இருந்து வந்த சுசந்திக்கா ஒலிம்பிக்கில் வெற்றிப்பெற்றார் எனவே குறைபாடுகள் சாதிப்பதற்கு ஒரு தடையல்ல.
இலங்கiயின் கல்வித் துறையில் ஒரு காலத்தில் யாழ்ப்பாணம் சிறந்து விளங்கியது. நாட்டில் படித்தவர்கள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் இருந்துதான் வந்தார்கள் . இப்;போது யுத்தம் இல்லை சமாதானம் நிலவுகிறது ஆகவே மீண்டும் வடக்கு மாகாணம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்
இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். உதயகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்துள்ளனர்