ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் 2.0 படத்தை நடிகர் ஆர்யா வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2.0 படம் லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுமார் 400 கோடி ரூபா செலவில் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்களும் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படம் எதிர்வரும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியிடப்படும் என ரசிகர்களை சந்தித்திருந்த போது போது ரஜினி அறிவித்திருந்தார்.
படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஆர்யா பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2.0 படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை ஓகஸ்ட் சினிமா நிறுவனம் 16 கோடி ரூபாக்கு வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு நிறுவனத்தில் ஆர்யா, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர் ஷாஜி நடேசன் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது