ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசிக்கும் கரு பஸ்வான் என்னும் தாத்தா வறுமை காரணமாக 11 வயதில் இருந்து மண் சாப்பிட்டு பழகியவர் 100 வயதிலும் மண் சாப்பிடும் பழக்கத்தை விடாமல் இருக்கிறார். தனது ஆரோக்கியத்தின் ரகசியமும் அது தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நாளைக்கு ஒரு கிலோ மண் வரை கூட சாப்பிட்டுவதாகவும் இந்த தாத்தா தெரிவித்துள்ளார். தனக்கு போதிய வருமானம் கிடைக்காத நிலையில் தான் 10 குழந்தைகளுக்கு நான் சாப்பாடு கொடுக்க வேண்டி இருந்ததினால் வாழ்க்கையில் மிகவும் விரக்தியில் இருந்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளவும் நினைத்ததாகவும் அப்போதுதான் இந்த மண் சாப்பிடும் பழக்கம் வந்ததாகவும் காலப் போக்கில் தான் இதற்கு அடிமையாகிவிட்டதாகவும் தெரிவித்த பஸ்வான் இப்போது தன்னால் மண் சாப்பிடும் பழக்கத்தை விட முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தினசரி மண் சாப்பிடும் வழக்கம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை என்பதுதான். 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கரு பஸ்வான் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தான் மிக முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.
கரு பஸ்வான் 2015ம் ஆண்டில் பீஹாரின் சபோர் க்ரிஷி வித்யாலயா விருதை இந்த விநோத பழக்கத்திற்காக பெற்றுள்ளார். இது போன்ற விநோதமான பழக்கம் பிகா சின்ட்ரோம் ( Pica syndrome ) என மருத்துவத்தில் சொல்லப்படுகின்றது. ஒரு பொருளின் நன்மை தீமை என்ன, அதில் என்ன ஊட்டச்சத்து இருக்கிறது என்பது தெரியாமல் அந்தப் பொருளின் மீது ஆசையை ஏற்படுத்திக் கொள்வது தான் இந்த பிகா சின்ட்ரோம் என்பது குறிப்பிடத்தக்கது.