தடை செய்யப்பட்டுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல் மற்றும் அவற்றினைப் பயன்படுத்தும் நிறுவனங்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை கூ தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள 10 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அதிகாரசபையின் கழிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும் மனிதப் பயன்பாட்டுக்கு உட்படக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரிப்புக்களை மேற்கொள்கின்ற தனியார் நிறுவனங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்