குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுப்பெற்றுக்கொள்ள மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை தாம் பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதாக அண்மையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார்.
எனினும் இவ்வாறு பொருளாதாரத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ள மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சி பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதியிடம் தாம் பேசியதாகவும் பிரதமரின் பொறுப்புக்களை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை எனவும் ஜனாதிபதி தம்மிடம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
தேசிய பொருளாதார கொள்கை வகுப்புக்களுக்கு, தேசிய பொருளாதார பேரவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஜனாதிபதி கோரியதாகத் தெரிவித்துள்ளார்.