குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படுவார் என பேராசிரியரும் சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான எஸ்,ஐ. கீதபொன்கலன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் மீளவும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்தால் அவர் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் உண்டு என பேராசிரியர் கீதபொன்கலன் தெரிவித்துள்ளார்.
மீளவும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டக்கூடிய சாத்தியங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பிரகாசமாக இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஆரம்ப காலங்களில் இலங்கையின் மண்டேலா என மைத்திரி புகழ்ந்து பாராட்டப்பட்ட போதிலும் இன்னும் பாரியளவில் கடமைகளை செய்ய வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
சொந்த கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பூரண ஆதரவு இல்லாத நிலையில் தேர்தலில் வெற்றியீட்டுவது என்பது சாத்தியப்படக்கூடிய வகையில் அமையவில்லை என தெரிவித்துள்ளார்.