Home உலகம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றியீட்டியுள்ளது

by admin


பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியீட்டியுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது போட்டியின் முதலாவது போட்டி இன்று வெலிங்டனில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பினை தேர்வு செய்தது. இதனையடுத்து துடுப்பபெடுத்தாடிய பாகிஸ்தான அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இந்தநிலையல் 105 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதனையடுத்து 106 என்ற வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி 15.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ஓட்டங்களைப் பெற்றது. இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. கொலின் முன்ரோ ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.


இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி எதிர்வரும் 25ம் திகதி ஒக்லாந்தில் நடைபெறவுள்ளது.  இரு அணிகளுக்கு இடையில் முடிவடைந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து 5-0 என வெற்றி பெற்று பாகிஸ்தானை வைட்வோஷ் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More