Home இலங்கைசுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டவர்கள் – ரவி கருணாநாயக்க

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு எதிராக செயற்பட்டவர்கள் – ரவி கருணாநாயக்க

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்டவர்கள் என முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களும் அமைச்சர்களுமான மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ஜோன் செனவிரட்ன மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க போன்றவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக பிரச்சாரம் செய்தவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களே ஜனாதிபதிக்காக பிரச்சாரம் செய்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்க சிலர் முயற்சிப்பதாகவும் அதற்கு இடமளிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் நாளைய தினம் பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்ற உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More