Home இந்தியாதி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு…

தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு…

by admin

திருப்பதி ஏழுமலையான் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீது 7 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். திருச்சியில் நடந்த நாத்திகர் மாநாட்டில் உரையாற்றிய கனிமொழி திருப்பதி ஏழுமலையான் பற்றியும், திருமலை தேவஸ்தானம் நிர்வாகம் பற்றியும் சில கருத்துக்களை தெரிவித்திருந்த நிரையில் அது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அத்துடன் கனிமொழியின் கருத்துகள் இந்துக்களின் மன உணர்வுகளை புண்படுத்தியதாக திருப்பதியில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து அவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. அத்துடன் தெலுங்கானா மாநிலத்திலும் பா.ஜ.க. மாவட்டத்தலைவர் ஒருவர் கனிமொழி மீது முறைப்பாடு செய்திருந்தார்.  ஆனால குறித்த முறைப்பாடுகள் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தெரிவிக்கப்பட்டிருந்த ஒரு மனுவினை விசாரித்த நீதிமன்றம், கனிமொழிக்கு எதிராக வழக்குபதிவு செய்ய உத்தரவிட்டது.

இதையடுத்து இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டுவது, தேசிய ஒருமைப்பாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துதல், மத நம்பிக்கைகளை அவமதிப்பது, உள்நோக்கத்தோடு மத உணர்வுகளை புண் படுத்துவது, அமைதியை சீர்குலைக்கும் விதமாக உள்நோக்கத்தோடு அவமதிப்பது, பொது மக்களிடையே கலகத்தைத் தூண்டும் வகையில் கருத்து கூறுவது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More