இரு தரப்பு வர்த்தக உறவுகளை விஸ்தரித்துக்கொள்வது தொடர்பில் இந்தோனேசியாவும் இலங்கைகும் இணக்கம் கண்டுள்ளன. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவிற்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தோனேசிய ஜனாதிபதியை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக, பொருளாதார, கல்வி மற்றும் தொழில்நுட்ப உறவுகளை வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர், குறித்த துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் நன்மை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.