குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை மற்றும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை என்பன குறித்து பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஜே.வி.பி கட்சி கோரியுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் ஜே.வி.பி கட்சி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தல்களுக்கு முன்னதாகவே குறித்த ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் நடத்தப்பட வேண்டுமென கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் விசாரணை அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.