11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந் திகதி முதல் மே 27-ந் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு அனுப்பப்பட்டனர்.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று ஆரம்பமாகியது. 360 இந்தியர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முதல் நாள் ஏலத்தில் 78 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாள் ஏலம் இன்று நடைபெற்றது. இன்று 91 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். இத்துடம் மொத்தமாக இரண்டு நாள் ஏலத்தில் 56 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 169 பேர் ரூ. 431.70 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜேம்ஸ் பால்க்னர், இயான் மார்கன், அஞ்ஜெலோ மேத்திவ்ஸ், ஜோ ரூட், சாமுவெல் பத்ரி, லசித் மலிங்கா உள்ளிட்ட முன்னணி வீரர்களை எடுக்க எந்த அணியும் முயலவில்லை.