குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும்; மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ம் திகதி விவாதம் நடத்தப்பட உள்ளது. அன்றையதினம் முற்பகல் 10.30 மணிக்கு விவாதம் நடைபெறும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
குறித்த ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் எப்போது விவாதம் நடத்துவது என்பது குறித்து இன்றைய தினம் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது விவாதத்தினை 6ம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
சபாநாயகர் நாளை கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார்
Jan 29, 2018 @ 09:15
சபாநாயகர் கரு ஜயசூரிய நாளைய தினம் கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் பாராளுமன்றில் விவாதம் செய்வது பற்றி நாளை கட்சித் தலைவர்களுடன், சபாநாயகர் கலந்துரையாட உள்ளார்.
பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் குறித்து விவாதம் நடத்தப்பட உள்ளது. எப்போது விவாதம் நடத்துவது என்பது குறித்து நாளைய தினம் கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.