Home இந்தியாகுஜராத்தில் பாரதீய ஜனதாவை உலுப்பிய ஜிக்னேஷ் மேவானி பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்கிறார்…

குஜராத்தில் பாரதீய ஜனதாவை உலுப்பிய ஜிக்னேஷ் மேவானி பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்கிறார்…

by admin

உத்தரபிரதேசத்தில் பாரதீய ஜனதாவை உலுப்பிய சட்ட மன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி பா. ரஞ்சித்தின் படத்தில் நடிக்க உள்ளார் ஒரு சட்டமன்ற உறுப்பினர்  படத்தில் நடிப்பது பெரிய விடயம் அல்ல. ஆனால் ஜிக்னேஷ் மேவானி நடிப்பது நிச்சயம் பெரிய விடயமாக கருதப்படுகிறது.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவர் கண்ணில் விரலை விட்டு துலாவிய  இளைஞரே இந்த ஜிக்னேஷ் மேவானி. அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜிக்னேஷ் தமிழ் படத்தில் நடிப்பது பிரதான பேசுபொருளாக மாறியிருக்கிறது.

காலா படத்தில், பா. ரஞ்சித் தற்போது  பிசியாக உள்ளார். இந்த படத்தை அடுத்து அவர் இயக்க உள்ள படத்தில் குஜராத் மாநிலத்தில் தலித்துகளுக்காக போராடும் ஜிக்னேஷ் மேவானி நடிக்கிறார். ஜிக்னேஷ் மேவானி ரஞ்சித்தின் படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார். ஜிக்னேஷ் அண்மையில் சென்னைக்கு சென்றபோது ரஞ்சித்தை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் மோடிக்கு சிம்ப சொப்பனமாக இருந்த ஜிக்னேஷ் தமிழ் படத்தில் நடிக்கவிருப்பது ஹொலிவுட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. படத்தை ஆரம்பிக்கும் முன்பே அது குறித்து ரசிகர்களிடையே ஆவல் ஏற்பட்டுள்ளது.

குஜராத் சட்டசபை தேர்தலில் வட்கம் தொகுதியில்,  பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தும், சுயேட்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி,  அந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More