இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிபாத்தில் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பயணிகளுடன் சென்ற பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் பக்கவாட்டு சுவரை உடைத்துக் கொண்டு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சிறிய படகுகள் மூலம் பேருந்தில் சிக்கியிருந்தவர்களையும் கால்வாய்க்குள் மூழ்கியவர்களையும் மீட்க முயற்சித்த போதும் 32 பேர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டும் காவல்துறையினரும் தீயணைப்புத்துறையினர் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் இதனால் ஆத்திரமுற்ற மக்கள் அவர்கள் மீது கல்வீசித் தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து மக்களை நோக்கி கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது