குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெர்மன் கார் உற்பத்தி நிறுவனங்களின் பரிசோதனை தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. வாகனங்களில் வெளியிடப்படும் புகையினால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து இந்த பரிசோதனை நடத்தப்படுகின்றது. இந்த பரிசோதனை மனிதர்கள் மற்றும் குரங்குகளைக் கொண்டு செய்யப்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பரிசோதனைகளை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜெர்மன் அரசாங்கம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் ஜெர்மனிய கார் உற்பத்தி நிறுவனங்கள், கார் என்ஜின்களின் ஊடாக சுற்றாடல் மாசடைதல் தொடர்பில் பிழையான தகவல்களை வழங்கியிருந்தது என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.