முத்தலாக் முறை ஒழியும்வரை தனது போராட்டம் தொடரும் என இந்தியாவின் முதல் பெண் இமாமாக நியமிக்கப்பட்ட ஜமீதா தெரிவித்துள்ளார். இஸ்லாமிய மதகுரு இமாமாக ஆண்களே நியமிக்கப்படுகின்ற நிலையில் கேரள மாநிலத்தில் முதன்முறையாக பெண் ஒருவர் இமாமாக நியமிக்கப்பட்டு கடந் வெள்ளிக்கிழமை இவர் தலைமையில் தொழுகையும் இடம்பெற்றது.
இந்நிலையில் இவர் வழங்கிய செவ்வியில் முத்தலாக் முறை முழுமையாக ஒழிக்கப்படும் வரையிலும் பெண்கள் முக்கிய துறைகளில் முன்னேற்றம் காணும்வரையிலும் தனது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளர்h. மேலும் தன் மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைப்பவர்கள் பற்றி தனக்கு எந்தக் கவலையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களுக்கு புத்தாண்டு அன்பளிப்பாக முத்தலாக் சட்டத்தை வழங்கும் வகையில் அச்சட்டத்தை நிறைவேற்ற, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று இடம்பெற்ற வரவுசெலவுத் திட்ட கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது