குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சவூதி அரேபியாவில் ஊழல் மோசடி தவிர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் அரசாங்கத்திற்கு பாரியளவில் வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் வழங்கிய மொத்த பணம் 106.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபியாவின் சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சவூதி அரசாங்கம் அதிரடியாக முக்கிய பிரபுக்கள் மன்னர் குடும்ப உறவினர்கள் உள்ளிட்ட 381 பேருக்கு எதிராக விசாரணைகசளை ஆரம்பித்திருந்தது. இவ்வாறு விசாரணை நடத்தியவர்களில் 56 பேரிடம் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏனையவர்கள் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் சிலர் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டு சொத்துக்கள், பணம் உள்ளிட்டனவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளனர். இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.